🏺 கலையரசன் ரா · அலகு 3

சிந்து வெளி நாகரிகம்

Term 1 · அலகு 3 · 73 வினா & விடை

Term 1
73 Q&A
Samacheer Kalvi

இந்த அலகு பற்றி

6ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி வரலாறு (Term 1) பாடப்புத்தகத்தின் "சிந்து வெளி நாகரிகம்" அலகின் அடிப்படையில் கலையரசன் ரா தயாரித்த 73 வினா-விடைகள். TNPSC குரூப் 4 தேர்வுக்கு உதவும் வகையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

கலையரசன் ரா

🎓 தமிழ மாணவன் தமிழுக்கான மாணவன் 🙏

Q

வினா & விடைகள்

1

உலகின் தொன்மையான நாகரிகங்கள் எவை?

✅ விடை
மெசபடோமியா நாகரிகம்: 3500 2000 பொ.ஆ.மு. சிந்துவெளி நாகரிகம் : 3300 1900 பொ.ஆ.மு. எகிப்து நாகரிகம் : 3100 1100 பொ.ஆ.மு சீன நாகரிகம் : 1700 1122 பொ.ஆ.மு.
2

மெசபடோமியா, சிந்துவெளி, எகிப்து, சீன நாகரிகங்கள் எத்தகைய நாகரிகங்கள்?

✅ விடை
நிக்கரை நாகரிகம்
3

மனிதர்கள் நதிக்கரைகளில் குடியேறியதன் காரணம் என்ன?

✅ விடை
வளமான மண், ஆற்று நீர், நீர் போக்குவரத்து
4

ஹரப்பா நகரத்தின் இடிபாடுகளை முதன்முதலில் தனது நூலில் விவரித்தவர் யார்?

✅ விடை
சார்லஸ் மேசன்
5

சார்லஸ் மேசன் தனது நூலில் குறிப்பிட்ட பகுதி எது?

✅ விடை
தற்போதைய பாகிஸ்தான், இந்திய வடமேற்கு பகுதி
6

ஹரப்பா இருந்ததற்கான முதல் வரலாற்று ஆதாரம் யாருடைய குறிப்புகள்?

✅ விடை
சார்லஸ் மேசன்
7

1856 ல் லாகூரில் இருந்து எந்தப் பகுதிக்கு இரயில் பாதை அமைக்கப்பட்டது?

✅ விடை
கராச்சி
8

நாகரிகம் என்பது எந்த மொழியிலிருந்து பெறப்பட்ட சொல்?

✅ விடை
லத்தீன் மொழி
9

சிவிஸ் என்ற இலத்தீன் மொழிச்சொல்லின் பொருள் என்ன?

✅ விடை
நகரம்
10

ஹரப்பா, மொகஞ்சதாரோ அகழ்ய்வு செய்ய ஆரம்பித்த ?

✅ விடை
1920
11

ஹரப்பா, மொகஞ்சதாரோ இடையே பொதுவான அம்சங்கள் உள்ளன என (1924) கூறியவர்?

✅ விடை
ஜான் மார்ஷல்
12

ASI ?

✅ விடை
Archaeological Survey of India
13

இந்திய தொல்லியல் துறை யாருடைய உதவியுடன் நிறுவப்பட்டது?

✅ விடை
அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம் (1861)
14

இந்திய தொல்லியல் துறையின் தலைமையகம் எங்கு உள்ளது?

✅ விடை
டெல்லி
15

சிந்து வெளி நாகரிகத்தில் பழமையான நாகரிகம் எது?

✅ விடை
ஹரப்பா நாகரிகம்
16

ஹரப்பா நாகரிகத்தின் காலப்பகுதி என்ன?

✅ விடை
வெண்கலக்காலம்
17

ஹரப்பா நாகரிகத்தின் பரப்பு என்ன?

✅ விடை
13 லட்சம் ச.கி.மீ.
18

ஹரப்பா நாகரிகத்தில் இருந்த ஊர்கள் எத்தனை?

✅ விடை
6 பெரிய நகரங்கள், 200 க்கும் மேற்பட்ட கிராமங்கள்
19

தொல்லியலாளர்கள் நிலத்தடியை ஆராய்ச்சி செய்ய எதனை பயன்படுத்துகின்றனர்?

✅ விடை
காந்தப்புல வருடி நுண்ணுணர்வு முறை
20

தொல்)பொருட்கள் புதையுண்டு உள்ளனவா என ஆராய பயன்படும் கருவி எது?

✅ விடை
ரேடார் (தொலை நுண்ணுணர்வு முறை)
21

ஹரப்பா நாகரிகம் எத்தகைய நாகரிகம்?

✅ விடை
நகர நாகரிகம்
22

ஹரப்பா நாகரிகம் நகர நாகரிகமாக விளங்கியதற்கு காரணம் என்ன?

✅ விடை
* திட்டமிடப்பட்ட நகரம், கட்டிட வேலைப்பாடு * தூய்மை பொது சுகாதாரத்திற்கு முன்னுரிமை * தரப்படுத்தப்பட்ட எடைகள், அளவீடுகள் * விவசாய, கைவினை தொழிலுக்கான அடித்தளம்
23

ஹரப்பா நாகரிகத்தின் நகரங்கள் எத்தனை பகுதிகளாக இருந்தது?

✅ விடை
இரண்டு 1. மேல்நகர அமைப்பு 2. கீழ்நகர அமைப்பு
24

மேல் நகர அமைப்பு எவ்வாறு இருந்தது?

✅ விடை
நகரின் மேற்கு பகுதி உயரமாக இருந்தது. அது கோட்டை எனப்பட்டது.
25

நகர நிர்வாகிகள் எங்கு தங்கி இருந்தனர்?

✅ விடை
மேல் நகர அமைப்பு
26

பொதுமக்கள் எங்கு தங்கி இருந்தனர்?

✅ விடை
கீழ் நகர அமைப்பு
27

பெருங்குளம், தானியக்களஞ்சியம் எப்பகுதியில் இருந்தன?

✅ விடை
மேல் நகர அமைப்பில்
28

கீழ்நகர அமைப்பு எவ்வாறு இருந்தது?

✅ விடை
நகரின் கிழக்கு பகுதி தாழ்வாக அதிக பரப்புடன் இருந்தது.
29

சிந்துவெளி நாகரிகத்திற்கு முன்னோடியாக இருந்த இடம் எது?

✅ விடை
மெஹெர்கர்
30

மெஹெர்கர் என்ற இடம் எங்கு உள்ளது?

✅ விடை
பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாநிலம் - போலன் ஆற்றுப் பள்ளத்தாக்கில்
31

மெஹோர்கரின் சிறப்பு என்ன?

✅ விடை
புதிய கற்கால மனிதர்கள் வாழ்ந்த இடம். (பொ.ஆ.மு. 7000 ஐ ஒட்டிய காலத்திலேயே மக்கள் வாழ்ந்த சான்றுகள் உள்ளது)
32

ஹரப்பா நாகரிகத்தில் தெருக்கள் எவ்வாறு இருந்தன?

✅ விடை
சட்ட வடிவில், செங்கோணத்தில் வெட்டிக்கொள்ளும்படி இருந்தன.
33

ஹரப்பா நாகரிகத்தில் ஒவ்வொரு வீட்டிலும் இடம் பெற்றிருந்த முக்கிய அமைப்புகள் எவை?

✅ விடை
கிணறு, முற்றம், குளியลறை, கழிப்பறை
34

ஹரப்பா நாகரிகத்தில் எவை இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை?

✅ விடை
அரண்மனை, வழிபாட்டுத் தலங்கள்
35

ஹரப்பா நாகரிகத்தில் கழிவுநீர் வடிகால் அமைப்பு எவ்வாறு இருந்தது?

✅ விடை
செங்கல் மற்றும் கல் தட்டைகளால் மூடப்பட்ட கழிவுநீர் வடிகால் அமைப்பு
36

பெருங்குளம் நகரின் எப்பகுதியில் இருந்தது?

✅ விடை
நகரின் நடுவில்
37

நீர் கசியாத பழமையான கட்டுமான அமைப்புக்கு சான்றாக இருந்தது எது?

✅ விடை
பெருங்குளம்
38

பெருங்குளம் எதனை கொண்டு அமைக்கப்பட்டிருந்தது?

✅ விடை
சுவர்கள் - சுட்ட செங்கற்கள், நீர்கசிவை தடுக்க - இயற்கையார் பூசப்பட்டிருந்தது.
39

பெருங்குளத்தின் அமைப்பு எவ்வாறு இருந்தது?

✅ விடை
வட, தென் புறம் - படிக்கட்டுகள் இருந்தன, குளத்தின் பக்கவாட்டில் மூன்று புறம் அறைகள் இருந்தன.
40

தானியக் களஞ்சியத்தில் எந்தெந்த தானியங்களின் மிச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன?

✅ விடை
கோதுமை, பார்லி, தினை வகைகள், எள், பருப்பு வகைகள்
41

ஹரியானா மாநிலத்தில் ராகிர்கியில் கண்டுபிடிக்கப்பட்ட தானியக் களஞ்சியம் எக்காலத்தை சார்ந்தது?

✅ விடை
முதிர்ச்சி அடைந்த ஹரப்பா காலம்
42

ஹரப்பா மக்கள் எந்த நாட்டுடன் விரிவான கடல் வணிகம் செய்தனர்?

✅ விடை
மெசபடோமியா
43

சிந்துவெளி முத்திரைகள் எங்கு கிடைத்துள்ளன?

✅ விடை
தற்கால ஈராக், குவைத், சிரியா ஆகிய பகுதிகளை குறிக்கும் பண்டைய மெசபடோமியாவில் உள்ள சுமேர் பகுதியில்
44

சிந்துவெளி பகுதியில் உள்ள மெலுக்கா எனும் இடத்தில் யார் அணிகலன் வாங்கியதாக குறிப்புகள் உள்ளன?

✅ விடை
சுமேரியாவின் அக்காடிய பேரரசுக்குட்பட்ட அரசன் நாரம்-சின்
45

சிந்துவெளி நாகரிக கப்பல் கட்டும் தளம் செப்பனிடும் தளம் எங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?

✅ விடை
லோத்தல்
46

லோத்தல் எங்கு அமைந்துள்ளது?

✅ விடை
குஜராத் - சபர்மதி ஆற்றின் ஒரு துணையாற்றின் கரையில்
47

அமர்ந்த நிலையில் உள்ள ஒரு ஆண் சிலை எங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?

✅ விடை
மொகஞ்சதாரோவில்
48

சிந்துவெளி நாகரிகத்தின் அளவுகோல் எங்கு தந்தத்திலான கண்டெடுக்கப்பட்டுள்ளது?

✅ விடை
குஜராத் அளவுகோல் (1704 மி.மீ வரை சிறிய அளவீடு கொண்டது)
49

மனிதர்களால் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட உலகம் எது?

✅ விடை
செம்பு
50

வெண்கலத்தால் ஆன சிறிய பெண் (நடன மாது) சிலை எங்கு கண்டெடுக்கப்பட்டது?

✅ விடை
மொகஞ்சதாரோ
51

கே.வி.டி என்பது என்ன?

✅ விடை
கொற்கை-வஞ்சி-தொண்டை
52

கொற்கை, வஞ்சி, தொண்டி, மத்ரை, உறை, கூடல்நகர் என்ற பெயர் கொண்ட இடங்கள் எந்த நாட்டில் தற்போது உள்ளன?

✅ விடை
பாகிஸ்தானில்
53

கொற்கை, பூம்புகார் போன்ற சங்ககால நகரங்கள் மற்றும் துறைமுகங்களின் பெயர்கள் கொண்ட இடங்கள் எந்த நாட்டில் தற்போது உள்ளன?

✅ விடை
ஆப்கானிஸ்தான்
54

ஆப்கானிஸ்தானில் உள்ள தமிழ்ப்பெயர் உடைய ஆறுகள் எவை?

✅ விடை
காவிரி, பொருன்ஸ்
55

பாகிஸ்தானில் உள்ள தமிழ்ப்பெயர் உடைய ஆறுகள் எவை?

✅ விடை
காவிரிவாலா, பொருனை
56

சிந்துவெளி மக்களின் உடை எதனால் ஆனது?

✅ விடை
பருத்தி (பொதுவாக பயன்பாட்டில் இருந்தது. கம்பளி அணிந்தனர்)
57

சிந்துவெளி மக்களிடம் எது இருந்ததற்கான ஆதாரம் இல்லை?

✅ விடை
படை (சில ஆயுதங்கள் மட்டும் கிடைத்துள்ளன)
58

சிந்துவெளி மக்கள் எந்த உலோகத்தின் பயனை அறிந்திருக்க வில்லை?

✅ விடை
இரும்பு
59

சிந்துவெளி மக்கள் ஆபரணம் செய்ய எதனை பயன்படுத்தினர்?

✅ விடை
<b>சிவப்பு நிற மணிக்கற்கள்</b>
60

சிந்துவெளி மக்களில் ஆபரணங்களை யார் விரும்பி அணிந்தனர்?

✅ விடை
ஆண், பெண் இருவருமே
61

சிந்துவெளி மக்களின் தொழில்கள் என்னென்ன?

✅ விடை
வேளாண்மை, கைவினை பொருட்கள் செய்தல், பானை வனைதல், அணிகலன் செய்தல், கால்நடை வளர்ப்பு
62

சிந்துவெளி மக்கள் பயன்படுத்திய மட்பாண்டங்கள் எந்த வண்ணத்தில் இருந்தன?

✅ விடை
சிவப்பு வண்ண மட்பாண்டத்தில் கருப்பு வண்ண அழகிய வேலைப்பாடுகள் இருந்தது.
63

சிந்துவெளியிடையே எத்தகைய வழிபாடு இருந்திருக்கலாம் என தெரிகிறது?

✅ விடை
தாய்வழிபாடு (பெண் சிலைகள் இருந்ததனால்)
64

சிந்துவெளி நாகரிக கால பொம்மைகள் எதனால் செய்யப்பட்டிருந்தன?

✅ விடை
சுடுமண்ணால்
65

ஹரப்பா நாகரிகம் எப்போது சரியத் தொடங்கியது?

✅ விடை
1900
66

பழமையான நான்கு நாகரிகங்களில் அதிக பரப்பை கொண்டிருந்த நாகரிகம் எது?

✅ விடை
சிந்துவெளி நாகரிகம்
67

மொஹஞ்சதாரோ எந்த அமைப்பால் உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது?

✅ விடை
யுனெஸ்கோ
68

கார்பன் வயது கணிப்பில் பயன்படும் ஐசோடோப்பு எது?

✅ விடை
C14
69

உலக முதன் முதலில் கட்டப்பட்ட பொதுக்குளம் எங்கு உள்ளது?

✅ விடை
மொகஞ்சதாரோவில்
70

சிந்து வெளி நாகரிகம் பரவி இருந்த எல்லை என்ன?

✅ விடை
கிழக்கு - காகர் ஹாக்ரா நதிப் பள்ளத்தாக்கு வரை | மேற்கு - பலுசிஸ்தான் மக்ரான் கடற்கரை வரை | வடகிழக்கு - ஆப்கானிஸ்தான் | தெற்கு - மகாராஷ்டிரா வரை
71

கிசே பிரமிடு யாரால் கட்டப்பட்டது?

✅ விடை
குஃபு மன்னர் (பொ.ஆ.மு. 2500 ல்)
72

ஜிகரட் என்பது என்ன?

✅ விடை
மெசடோமியா ஊர் நம்மு என்ற அரசனால் சின் என்ற சந்திர கடவுளுக்கு கட்டப்பட்ட ஊர்
73

அபுசிம்பல் எனப்படும் இரட்டைக்கோயில் யாரால் கட்டப்பட்டது?

✅ விடை
எகிப்து அரசன் 2 ஆம் ராமெசிஸ்

தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள்

🗺️
மற்ற அலகுகளைப் பார்க்க
Term 1 — அனைத்து அலகுகளும்
📚
புத்தக அடைப்புக்குத் திரும்ப
மற்ற Terms-ஐப் பார்க்க
📋
TNPSC குரூப் 4 PYQ பயிற்சி
முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
📰
தினசரி நடப்பு நிகழ்வுகள்
தினமும் புதுப்பிக்கப்படும் MCQ