🏺 கலையரசன் ரா · அலகு 2

மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்

Term 2 · அலகு 2 · 151 வினா & விடை

Term 2
151 Q&A
Samacheer Kalvi

இந்த அலகு பற்றி

6ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி வரலாறு (Term 2) பாடப்புத்தகத்தின் "மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்" அலகின் அடிப்படையில் கலையரசன் ரா தயாரித்த 151 வினா-விடைகள். TNPSC குரூப் 4 தேர்வுக்கு உதவும் வகையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

கலையரசன் ரா

🎓 தமிழ மாணவன் தமிழுக்கான மாணவன் 🙏

Q

வினா & விடைகள்

1

சமண மதத்தின் திரிசூலங்கள் அல்லது மூன்று ரத்தினங்கள் (திரிரத்தினங்கள்) யாவை?

✅ விடை
நம்பிக்கை (நன்னம்பிக்கை), அறிவு (நல்லறிவு), செயல் (நற்செயல்).
2

மகாவீரர் போதித்த சமண மதத்தின் ஐந்து முக்கியக் கொள்கைகள் (பஞ்ச மகா விரதங்கள்) யாவை?

✅ விடை
அகிம்சை (கொல்லாமை), சத்யா (உண்மை), அஸ்தேயா (திருடாமை), அபரிகிரகா (பொருள் சேர்க்காமை), பிரம்மச்சரியம் (புலனடக்கம்).
3

அறிவு மலர்ச்சி காலம் என அழைக்கப்படும் காலம் எந்த நூற்றாண்டு?

✅ விடை
கி.மு.ஆறாம் நூற்றாண்டு
4

இந்தியாவின் அறிவு மற்றும் ஆன்மீக வளர்ச்சியின் அடையாள சின்னமாக விளங்கும் காலம் எது?

✅ விடை
கி.மு. ஆறாம் நூற்றாண்டு
5

கி.மு. ஆறாம் நூற்றாண்டை நட்சத்திரங்களின் மழை என்று பொருத்தமாக வர்ணித்தவர் யார்?

✅ விடை
வரலாற்று அறிஞர் வில் டூரண்ட்
6

அறிவு மலர்ச்சி காலத்தை அறிய உதவும் இலக்கியச் சான்றுகள் எவை?

✅ விடை
அங்கங்கள் (சமண நூல்கள்), திரிபிடகங்கள் மற்றும் ஜாதகங்கள் (பௌத்த நூல்கள்)
7

புதிய அறிவு மலர்ச்சி ஏற்பட்டதற்கு காரணம் என்ன?

✅ விடை
I.ஏற்கனவே இருந்த சமயத்தின் பெயரால் செயல்படுத்தப்பட்ட சுரண்டல் நடைமுறைகள் II.புதிய நம்பிக்கைகள் தோன்றுவதற்கு வழியமைத்துக் கொடுத்தன. பின்வேத காலத்தில் பரிந்துரைக்கப்பட்ட சிக்கலான சடங்குகளும் வேள்விகளும், அதிக அளவில் செலவு செய்ய வேண்டி இருந்த வேள்விச் சடங்குகள். III.மூடநம்பிக்கைகளும், நடைமுறைகளும் சாதாரண மக்களைக் குழப்பம் அடையச் செய்தன. IV.வேள்விச் சடங்குகளுக்கு மாற்றாக கற்பிக்கப்பட்ட உபநிடதத் தத்துவங்களைச் சாதாரண மக்களால் புரிந்துகொள்ள இயலவில்லை V.அடிமைமுறை, சாதிமுறை மற்றும் பாலியல் பாகுபாடுகளும் புதிய விழிப்புணர்வு தோன்றுவதற்குக் காரணமாயின.
8

சமண மதத்தில் உள்ள தீர்த்தங்கரர்கள் எத்தனை பேர்?

✅ விடை
24
9

சமணம் எதனை மையமாகக் கொண்டது?

✅ விடை
சமணம் 24 தீர்த்தங்கரர்களை மையமாகக் கொண்டது.
10

தீர்த்தங்கரர்கள் என்பவர்கள் யார்?

✅ விடை
பல்வேறு காலங்களில் மதம் தொடர்பான உண்மைகளைப் போதித்தோர் ஆவர்.
11

முதல் தீர்த்தங்கரர் யார்?

✅ விடை
ரிஷபர்
12

கடைசித் தீர்த்தங்கரர் யார்?

✅ விடை
மகாவீரர்
13

கி.மு. ஆறாம் நூற்றாண்டில் யாருடைய வழிகாட்டுதலில் சமணம் முக்கியத்துவம் பெற்றது?

✅ விடை
மகாவீரரின்
14

மகாவீரரின் இயற்பெயர்?

✅ விடை
வர்த்தமானர்
15

மகாவீரர் எங்கு பிறந்தார்?

✅ விடை
பீகார் வைசாலிக்கு அருகேயுள்ள குந்த கிராமம்
16

மகாவீரரின் பெற்றோர் யார்?

✅ விடை
சித்தார்த்தர், திரிசிலா
17

மகாவீரரின் தாய் எந்த இனத்தைச் சார்ந்தவர்?

✅ விடை
லிச்சாவி
18

மகாவீரரின் மனைவி யார்?

✅ விடை
யசோதா
19

மகாவீரர் எங்கு மறைந்தார்?

✅ விடை
பவுபுரி - பீகார் (பொ.ஆ.மு. 527, தனது 72வயதில்)
20

சமணம் (Jain) என்னும் சொல் இம்மொழியிலிருந்து பெறப்பட்டது?

✅ விடை
ஜினா (Jina) என்ற சமஸ்கிருத சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும்.
21

Jina என்பதன் பொருள் என்ன?

✅ விடை
தன்னையும், வெளியுலகத்தையும் வெல்வது என்பதாகும்.
22

மகாவீரர் என்பதன் பொருள் என்ன?

✅ விடை
தலைசிறந்த வீரர்
23

மகாவீரரின் போதனைகளைத் தொகுத்தவர்?

✅ விடை
கௌதம சுவாமி.
24

மகாவீரரின் போதனைகளின் தொகுப்பின் பெயர்?

✅ விடை
ஆகம சித்தாந்தம்.
25

சமண மதம் எத்தனை பிரிவுகளாகப் பிரிந்தது?

✅ விடை
திகம்பரர், சுவேதாம்பரர் என இரு பிரிவுகளாகப் பிரிந்தது.
26

திகம்பரர் என்பவர்கள் யார்?

✅ விடை
திகம்பரர் வைதீக பழமைவாதப் போக்குடைய சீடர்கள்.
27

ஆடை அணியாத நிர்வாண நிலையில் வாழ்ந்த சமண துறவிகளின் பெயர் என்ன?

✅ விடை
திகம்பரர்.
28

எந்த பிரிவினை சார்ந்தவர்கள் எந்த விதமான உடைமையும் வைத்துக் கொள்ள தடை விதிக்கப்பட்டிருந்தது?

✅ விடை
திகம்பரர்.
29

பெண்கள் நேரடியாக விடுதலை பெறவோ நிர்வாண நிலையை அடையவோ முடியாது என நம்பியவர்கள் எந்த பிரிவினை சார்ந்தவர்கள்?

✅ விடை
திகம்பரர்.
30

சுவேதாம்பரர் என்பவர்கள் யார்?

✅ விடை
முற்போக்கானவர்களாகக் கருதப்படுகிறார்கள்.
31

வெள்ளை நிற ஆடைகளை அணிந்த சமண துறவிகளின் பெயர் என்ன?

✅ விடை
சுவேதாம்பரர்.
32

சுவேதாம்பரர்களின் உடைமைகள் என்ன?

✅ விடை
ரஜோகரனா (கம்பளி நூல்களைக் கொண்ட சிறிய துடைப்பம்), பிச்சை பாத்திரம், புத்தகம்.
33

ஆண்களைப் போலவே பெண்களும் விடுதலை பெற சமமான தகுதிகளைக் கொண்டுள்ளனர் என நம்பியவர்கள்?

✅ விடை
சுவேதாம்பரர்கள்.
34

இந்தியாவில் சமணம் பரவலாக ஏற்று கொள்ளப்பட்டதற்கான காரணங்கள்?

✅ விடை
I.மக்கள் பேசிய மொழியிலேயே சமணக் கருத்துக்கள் சொல்லப்பட்டன. II.புரிந்து கொள்ளும்படியான போதனைகள். III.அரசர்கள் மற்றும் வணிகர்களின் ஆதரவு. IV.சமணத் துறவிகளின் விடாமுயற்சி.
35

பண்டைய தமிழ் இலக்கியங்கள் சமணத்தை எவ்வாறு குறிப்பிடுகின்றன?

✅ விடை
ஜைனம்.
36

சமணர் மலை எங்குள்ளது?

✅ விடை
மதுரை நகரிலிருந்து 15 கி.மீ தொலைவில் கீழக்குயில்குடி கிராமத்தில் சமணர் மலை என்ற பெயரில் ஒரு குன்று உள்ளது.
37

சமணர் மலையில் காணப்படுவது என்ன?

✅ விடை
சமணத் துறவிகளால் உருவாக்கப்பட்ட தீர்த்தங்கரர்களின் உருவங்கள் இம்மலையில் காணப்படுகின்றன.
38

பாண்டவர் படுக்கை என்றழைக்கப்படும் சமணர் குகை எங்குள்ளது?

✅ விடை
மதுரையிலிருந்து 25 கி.மீ தொலைவிலுள்ள அரிட்டாபட்டி என்ற கிராமத்தில் கலிஞ்சமலை உள்ளது. இதன் ஒரு பகுதியில் பாண்டவர் படுக்கை என்று அழைக்கப்படும் சமணர் குகைகள் உள்ளன.
39

பாண்டவர் படுக்கை என்றால் என்ன?

✅ விடை
சமணத் துறவிகளுக்கான கற்படுக்கைகளே பாண்டவர் படுக்கை என அழைக்கப்படுகிறது.
40

அறவோர் பள்ளி என்பது சமணத்துறவிகள் வாழ்ந்த இடம் என குறிப்பிடும் நூல்?

✅ விடை
மணிமேகலை
41

கோவலனும் கண்ணகியும் மதுரைக்குச் செல்லும் வழியில் சந்தித்த சமண பெண் துறவியின் பெயர் என்ன?

✅ விடை
கவந்தியடிகள் (தமிழ் காப்பியம் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.)
42

தமிழகத்தில் சமண மடாலயங்கள் எங்கெங்கு இருந்துள்ளன?

✅ விடை
புகார், உறையூர், மதுரை, வஞ்சி (கரவூர்) காஞ்சிபுரம்
43

ஜைனக் காஞ்சி எங்குள்ளது?

✅ விடை
காஞ்சிபுரத்திலுள்ள திருப்பருத்திக் குன்றம் என்ற கிராமத்தில் இரண்டு பழமையான சமணக் கோவில்கள் உள்ளன. இக்கிராமம் முன்னர் ஜனைக் காஞ்சி என்று அழைக்கப்பட்டுள்ளது.
44

சமணர் கால ஓவியங்கள் மற்றும் சிலைகள் எங்குள்ளது?

✅ விடை
திருப்பருத்திக்குன்றம், சித்தன்னவாசல், சிதறல் மலைக்கோவில்
45

இந்தியாவில் செதுக்கப்பட்ட மிக உயரமான சமண சிலை எது?

✅ விடை
சிரவண -பெலகொலாவில் உள்ள கோமதிஸ்வரர் சிலை 57 அடி (கர்நாடகா)
46

பௌத்த மதத்தை நிறுவியவர் யார்?

✅ விடை
கௌதம புத்தர்
47

புத்தரின் இயற்பெயர் என்ன?

✅ விடை
சித்தார்த்தர்.
48

மகாவீரர், புத்தர் இருவரும் எவ்விரிவை சார்ந்தவர்கள்?

✅ விடை
சத்திரிய இளவரசர்கள்
49

புத்தர் எந்த வம்சத்தில் பிறந்தார்?

✅ விடை
சாக்கிய வம்சம்
50

புத்தரின் பெற்றோர் யார்?

✅ விடை
சுித்தோதனர், மாயாதேவி
51

புத்தரின் தாயார் எப்போது இயற்கை எய்தினார்?

✅ விடை
புத்தர் ஏழு நாள் குழந்தையாக இருந்தபோது
52

புத்தரை வளர்த்தவர் யார்?

✅ விடை
சிற்றன்னை (கௌதமி)
53

புத்தரின் மனைவி யார்?

✅ விடை
யசோதரா
54

புத்தரின் மகனின் பெயர் என்ன?

✅ விடை
இராகுலன்
55

புத்தரின் நெருக்கமான சீடர் யார்?

✅ விடை
ஆனந்தன்
56

புத்தர் நான்கு துயரம் மிகுந்த காட்சிகளையும் தன்னுடைய எந்த வயதில் கண்டார்?

✅ விடை
29வது வயதில்.
57

புத்தர் கண்ட நான்கு துயர காட்சிகள்?

✅ விடை
1.கூன் விழுந்த முதுகெலும்பு, கந்தல் ஆடைகளுடனும் கவனிப்பாரற்று இறந்துவிட்ட ஒரு மனிதனின் சடலம் அழுது கொண்டிருக்கும் அவனின் உறவினர்களால் இடுகாட்டிற்குக் கொண்டு செல்லப்படுதல். 4. ஒரு துறவி
58

புத்தர் எங்கு பிறந்தார்?

✅ விடை
கபிலவஸ்து (லும்பினி தோட்டம்) (நேபாளம் )
59

புத்தர் எங்கு மறைந்தார்?

✅ விடை
குசி நகரம், (உ.பி - தனது 80வது வயதில்)
60

புத்தர் என்பதன் பொருள் என்ன?

✅ விடை
ஞானம் பெற்ற ஒருவர்
61

புத்தர் எந்த வயதில் அரண்மனையை விட்டு வெளியேறி துறவரம் மேற்கொண்டார்?

✅ விடை
29
62

புத்தர் எத்தனை ஆண்டுகள் தவம் புரிந்தார்?

✅ விடை
ஆறு ஆண்டுகள்
63

புத்தர் எங்கு ஞானோதயம் பெற்றார்?

✅ விடை
கயாவிற்கு அருகிலுள்ள ஒரு அரச மரத்தின் அடியில் அமர்ந்து தவம் இருந்தபோது, தனது 35-வது வயதில் ஞானோதயம் பெற்றார்.
64

புத்தர் தனது முதல் போதனை உரையை எங்கு நிகழ்த்தினார்?

✅ விடை
வாரணாசிக்கு அருகிலுள்ள சாரநாத் என்னுமிடத்தில் உள்ள மான் பூங்காவில் (Dharmachakra Pravartana) நிகழ்த்தினார்.
65

புத்தரின் முதல் போதனை உரை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

✅ விடை
தர்மசக்ர பிரவர்த்தனா அல்லது தர்மச் சக்கரத்தைத் திருப்புதல் என்று அழைக்கப்படுகிறது.
66

புத்தரின் நான்கு உயரிய உண்மைகள் யாவை?

✅ விடை
1. வாழ்க்கை துன்பங்கள் நிறைந்தது. 2. ஆசையே துன்பங்களின் மூல காரணம். 3. ஆசையைத் துறந்தால் துன்பமில்லாத வாழ்க்கையை வாழலாம். 4. சரியான பாதையைப் பின்பற்றினால் (எண்வகை வழிகள்) ஆசைகளை வெல்லலாம்.
67

புத்தர் துன்பங்களிலிருந்து விடுபட கூறிய வழிகள் எத்தனை?

✅ விடை
எட்டு வழிகள் (எண்வகை வழிகள் - அஷ்டாங்க மார்க்கம்).
68

புத்தரின் எண்வகை வழிகள் யாவை?

✅ விடை
1. நல்ல நம்பிக்கை 2. நல்ல எண்ணம் 3. நல்ல பேச்சு 4. நல்ல செயல் 5. நல்ல வாழ்க்கை 6. நல்ல முயற்சி 7. நல்ல நினைவு 8. நல்ல தியானம்.
69

புத்தரின் போதனைகள் எளிய மக்களிடையே எளிதாக பரவக் காரணம் என்ன?

✅ விடை
அவருடைய போதனைகள் மிகவும் எளிமையாக இருந்தன. அன்றாட வாழ்க்கைக்குப் பயன்படும் வகையில் அமைந்திருந்தன.
70

புத்தர் எதனை கடுமையாக எதிர்த்தார்?

✅ விடை
சடங்குகளையும் வேள்விகளையும், சாதிப் பாகுபாடுகளையும் புத்தர் கடுமையாக எதிர்த்தார்.
71

புத்தரின் கருத்துக்கள் எந்த மொழியில் போதிக்கப்பட்டன?

✅ விடை
மக்கள் பேசிய பிராகிருதம் (பாலோ) மொழியில் போதிக்கப்பட்டன.
72

புத்தர் நிறுவிய அமைப்பின் பெயர் என்ன?

✅ விடை
பௌத்த சங்கம் (துறவிகளுக்கான அமைப்பு).
73

பௌத்த சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

✅ விடை
பிக்ஷுக்கள் (ஆண் துறவிகள்), பிக்ஷுணிகள் (பெண் துறவிகள்) என்று அழைக்கப்பட்டனர்.
74

பௌத்த சங்கத்தின் நோக்கம் என்ன?

✅ விடை
புத்தரின் கொள்கைகளைப் பரப்புவதும், எளிய தூய்மையான வாழ்க்கையை மேற்கொள்வதும் ஆகும்.
75

பௌத்த மதம் எத்தனை முக்கிய பிரிவுகளாகப் பிரிந்தது?

✅ விடை
ஹீனயானம், மகாயானம் என இரு பிரிவுகளாகப் பிரிந்தது.
76

ஹீனயானம் பிரிவின் முக்கியக் கொள்கை என்ன?

✅ விடை
புத்தரை ஒரு மனிதராகவும், வழிகாட்டியாகவும் மட்டுமே ஏற்றுக் கொண்டனர். உருவ வழிபாட்டை நிராகரித்தனர்.
77

மகாயானம் பிரிவின் முக்கியக் கொள்கை என்ன?

✅ விடை
புத்தரை கடவுளாக ஏற்றுக்கொண்டு, அவரின் சிலைகளைச் செதுக்கி உருவ வழிபாட்டை மேற்கொண்டனர்.
78

ஹீனயான பௌத்தர்கள் பயன்படுத்திய மொழி எது?

✅ விடை
பாலி மொழி.
79

மகாயான பௌத்தர்கள் பயன்படுத்திய மொழி எது?

✅ விடை
சமஸ்கிருத மொழி.
80

பௌத்த மதத்தைப் பரப்ப ஆதரவு தந்த முக்கிய அரசர்கள் யார்?

✅ விடை
அசோகர், கனிஷ்கர், ஹர்ஷர் போன்ற அரசர்கள்.
81

அசோகர் பௌத்த மதத்தைப் பரப்புவதற்காகத் தனது பிள்ளைகளை எங்கு அனுப்பினார்?

✅ விடை
மகன் மகிந்தா மற்றும் மகள் சங்கமித்தையை இலங்கைக்கு அனுப்பினார்.
82

சைத்தியம் என்பது என்ன?

✅ விடை
பௌத்தர்களின் பிரார்த்தனைக் கூடம் அல்லது தியான அரங்கம் ஆகும்.
83

விகாரைகள் என்பது என்ன?

✅ விடை
பௌத்த துறவிகளின் தங்குமிடங்கள் அல்லது மடாலயங்கள் ஆகும். இவை துறவிகள் வாழ்வதற்கும் கல்வி கற்பதற்கும் பயன்படுத்தப்பட்டன.
84

ஸ்தூபி என்பது என்ன?

✅ விடை
புத்தரின் உடல் உறுப்புகளின் எச்சங்கள் (சாம்பல், எலும்புகள்) மீது கட்டப்பட்ட அரைவட்ட வடிவக் கட்டடங்கள் ஆகும். இவை பௌத்தர்களின் புனித சின்னங்களாகக் கருதப்படுகின்றன.
85

முதல் பௌத்த மாநாடு எங்கு நடைபெற்றது?

✅ விடை
ராஜகிருஹம்
86

இரண்டாவது பௌத்த மாநாடு எங்கு நடைபெற்றது?

✅ விடை
வைசாலி
87

மூன்றாவது பௌத்த மாநாடு எங்கு நடைபெற்றது?

✅ விடை
பாடலிபுத்திரம்
88

நான்காவது பௌத்த மாநாடு எங்கு நடைபெற்றது?

✅ விடை
காஷ்மீர்
89

தமிழ்நாட்டில் பௌத்தம் பரவியதற்கான சான்றுகள் எங்கு காணப்படுகின்றன?

✅ விடை
காஞ்சிபுரம், காவிரிப்பூம்பட்டினம், பூம்புகார் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் பௌத்த சிற்பங்களும், ஸ்தூபிகளும் கண்டறியப்பட்டுள்ளன.
90

காஞ்சிபுரத்தில் இருந்த புகழ்பெற்ற பௌத்த பல்கலைக்கழகம் எது?

✅ விடை
பௌத்த கல்வி மையம் (காஞ்சிபுரம் பௌத்த மதத்தின் பெரிய மையமாக விளங்கியது மற்றும் புகழ்பெற்ற தர்க்க அறிஞர் தின்னகர் இங்கு வாழ்ந்தார்).
91

மணிமேகலை காப்பியத்தின் நாயகி மணிமேகலை பௌத்த மதக் கோட்பாடுகளை எங்கு கற்றறிந்தார்?

✅ விடை
காஞ்சிபுரத்தில்
92

நாளந்தா பல்கலைக்கழகத்தின் தகைசால் பேராசிரியர் தர்மபாலர் எந்த ஊரைச் சேர்ந்தவர்?

✅ விடை
காஞ்சிபுரம்
93

சமணத்திற்கும் பௌத்தத்திற்கும் இடையே இருந்த பொதுவான ஒற்றுமைகள் யாவை?

✅ விடை
I.இரு மதங்களும் மகாவீரர், புத்தர் ஆகிய சத்திரிய இளவரசர்களால் தோற்றுவிக்கப்பட்டன. II.வேதங்களின் அதிகாரத்தை மறுத்தன. III.யாகங்கள், சடங்குகளை எதிர்த்தன. IV.அகிம்சையைப் போதித்தன.
94

சமணம் மற்றும் பௌத்த மதங்களின் வேற்றுமைகள் யாவை?

✅ விடை
சமணம் தீவிரமான துறவறத்தையும், கடுமையான நோன்புகளையும் (உண்ணாவிரதம்) வலியுறுத்தியது. பௌத்தம் இடைவழிப் பாதையை (மத்திய மார்க்கம்) பின்பற்றியது.
95

சமண மதம் இந்தியாவில் மட்டும் தங்கியிருந்தபோது பௌத்தம் உலகெங்கும் பரவக் காரணம் என்ன?

✅ விடை
பௌத்தத்தின் எளிய கொள்கைகளும், அசோகர், கனிஷ்கர் போன்ற பேரரசர்களின் தீவிர அரச ஆதரவும் அதை உலக மதமாக மாற்றியது.
96

சமணத் தத்துவத்தின்படி கர்ம வினையிலிருந்து விடுதலை பெற உதவுவது எது?

✅ விடை
திரிரத்தினங்கள் (நன்னம்பிக்கை, நல்லறிவு, நற்செயல்)
97

புத்தர் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது பற்றி என்ன கூறினார்?

✅ விடை
புத்தர் கடவுளின் இருப்பை அங்கீகரிக்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை; ஆனால் பிரபஞ்ச விதிகளுக்கு உட்பட்டது வாழ்க்கை என நம்பினார்.
98

பௌத்த கலை மற்றும் கட்டடக்கலைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டுகள் எவை?

✅ விடை
சாஞ்சி ஸ்தூபி, அஜந்தா மற்றும் எல்லோரா குகை ஓவியங்கள்.
99

சமண மதத்தின் போதனைகள் எந்த மாநாட்டில் முதன்முதலில் நூல்களாகத் தொகுக்கப்பட்டன?

✅ விடை
பாடலிபுத்திரத்தில் நடைபெற்ற முதலாம் சமண மாநாட்டில் அங்கங்கள் தொகுக்கப்பட்டன.
100

புத்த சரிதம் என்ற நூலை எழுதியவர் யார்?

✅ விடை
அஸ்வகோஷர் (இது சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட புத்தரின் வாழ்க்கை வரலாறு ஆகும்).
101

சமண சமயத்தின் 22வது தீர்த்தங்கரர் யார்?

✅ விடை
நேமிநாதர்
102

சமண சமயத்தின் 23வது தீர்த்தங்கரர் யார்?

✅ விடை
பார்சவநாதர்
103

மகதத்தின் எழுச்சிக்குக் காரணமாய் இருந்த முக்கிய அரச வம்சங்கள் எத்தனை?

✅ விடை
நான்கு அரச வம்சங்கள் முக்கியப் பங்காற்றின. அவை: ஆரியங்க வம்சம், சிசுநாக வம்சம், நந்த வம்சம், மௌரிய வம்சம்.
104

ஹரியங்கா (ஆரியங்க) வம்சத்தைத் தோற்றுவித்தவர் யார்?

✅ விடை
பிம்பிசாரர்.
105

பிம்பிசாரர் தனது எல்லையை விரிவுபடுத்த எந்தக் கொள்கையைக் கையாண்டார்?

✅ விடை
திருமண உறவுகள் மூலம் எல்லையை விரிவுபடுத்தும் கொள்கையைக் கையாண்டார் (அவர் கோசலம், வஜ்ஜி மற்றும் பக்கா அரச குடும்பங்களுடன் திருமண உறவு வத்துக் கொண்டார்).
106

பிம்பிசாரரின் மகன் யார்?

✅ விடை
அஜாதசத்ரு.
107

தனது தந்தையைக் கொன்றுவிட்டு மகதத்தின் அரியணையில் ஏறியவர் யார்?

✅ விடை
அஜாதசத்ரு (இவர் பிம்பிசாரரைக் சிறையிலிட்டு பின்னர் கொன்றதாகக் கூறப்படுகிறது).
108

அஜாதசத்ரு எந்தப் பௌத்த மாநாட்டைக் கூட்டினார்?

✅ விடை
ராஜகிருஹத்தில் முதலாவது பௌத்த மாநாட்டைக் கூட்டினார்.
109

மகதத்தின் தலைநகரை ராஜகிருஹத்திலிருந்து பாடலிபுத்திரத்திற்கு மாற்றியவர் யார்?

✅ விடை
உதயன் (அஜாதசத்ருவின் மகன்).
110

ஹரியங்கா வம்சத்தைத் தொடர்ந்து மகதத்தை ஆண்ட வம்சம் எது?

✅ விடை
சிசுநாக வம்சம்.
111

சிசுநாக வம்சத்தின் புகழ்பெற்ற அரசர் யார்?

✅ விடை
காலசோகா.
112

வைசாலியில் இரண்டாவது பௌத்த மாநாட்டைக் கூட்டியவர் யார்?

✅ விடை
காலசோகா.
113

இந்தியாவின் முதல் பேரரசை உருவாக்கியவர்கள் யார்?

✅ விடை
நந்தர்கள்.
114

நந்த வம்சத்தைத் தோற்றுவித்தவர் யார்?

✅ விடை
மகாபத்ம நந்தர்.
115

மகாபத்ம நந்தரைத் தொடர்ந்து அவருடைய எத்தனை மகன்கள் ஆட்சி செய்தனர்?

✅ விடை
எட்டு மகன்கள் ஆட்சி செய்தனர். இவர்கள் ஒன்பது நந்தர்கள் (நவநந்தர்கள்) என்று அழைக்கப்படுகிறார்கள்.
116

நந்த வம்சத்தின் கடைசி அரசர் யார்?

✅ விடை
தனநந்தர்.
117

மௌரியப் பேரரசைத் தோற்றுவித்தவர் யார்?

✅ விடை
சந்திரகுப்த மௌரியர்.
118

சந்திரகுப்த மௌரியர் யாருடைய உதவியுடன் தனநந்தரை வீழ்த்தி மௌரியப் பேரரசை நிறுவினார்?

✅ விடை
சாணக்கியர் (கௌடில்யர்) உதவியுடன்.
119

மௌரியப் பேரரசின் தலைநகரம் எது?

✅ விடை
பாடலிபுத்திரம்.
120

மௌரியப் பேரரசின் சின்னம் என்ன?

✅ விடை
முத்திரை சின்னம் - நான்கு சிங்கம் (சாரநாத் தூண்).
121

மௌரிய அரசால் பயன்படுத்தப்பட்ட நாணயம் எது?

✅ விடை
பணா (வெள்ளி நாணயங்கள்).
122

அர்த்தசாஸ்திரம் என்ற நூலை எழுதியவர் யார்?

✅ விடை
கௌடில்யர் (சாணக்கியர்).
123

இண்டிகா என்ற நூலை எழுதியவர் யார்?

✅ விடை
மெகஸ்தனிஸ்.
124

மெகஸ்தனிஸ் யார்?

✅ விடை
கிரேக்க ஆட்சியாளர் செலுக்கஸ் நிகேட்டரின் தூதுவர் ஆவார். இவர் சந்திரகுப்த மௌரியரின் அரசவையில் இருந்தார்.
125

சந்திரகுப்த மௌரியர் தனது வாழ்நாளின் இறுதியில் எந்த மதத்தை ஏற்றுக்கொண்டார்?

✅ விடை
சமண மதம்.
126

சந்திரகுப்த மௌரியர் எந்த சமண துறவியுடன் தென்னிந்தியாவுக்குச் சென்றார்?

✅ விடை
பத்ரபாகு.
127

சந்திரகுப்த மௌரியர் எங்கு, எவ்வாறு உயிர் நீத்தார்?

✅ விடை
கர்நாடகாவிலுள்ள சிரவணபெலகொலாவில் சல்லேகனா (உண்ணாவிரதம் இருந்து உயிர் துறத்தல்) செய்து உயிர் நீத்தார்.
128

சந்திரகுப்த மௌரியரின் மகன் யார்?

✅ விடை
பிந்துசாரர்.
129

பிந்துசாரரின் இயற்பெயர் என்ன?

✅ விடை
சிம்மசேனா.
130

அமித்ரகதா என்று அழைக்கப்பட்ட மௌரிய அரசர் யார்?

✅ விடை
பிந்துசாரர்.
131

அமித்ரகதா என்பதன் பொருள் என்ன?

✅ விடை
எதிரிகளை அழிப்பவன்.
132

பிந்துசாரரின் ஆட்சியின் போது உஜ்ஜைனியின் ஆளுநராக இருந்தவர் யார்?

✅ விடை
அசோகர் (பிந்துசாரரின் மகன்).
133

மௌரிய அரசர்களில் மிக புகழ்பெற்ற அரசர் யார்?

✅ விடை
அசோகர்.
134

அசோகர் எத்தனையாவது வயதில் அரியணை ஏறினார்?

✅ விடை
பிந்துசாரர் இறந்தவுடன் ஏற்பட்ட வாரிசுரிமைப் போருக்குப் பின் கி.மு. 268 இல் அரியணை ஏறினார்.
135

அசோகர் தேவனாம்பியர் என்று அழைக்கப்பட்டார், இதன் பொருள் என்ன?

✅ விடை
கடவுளுக்குப் பிரியமானவன்.
136

அசோகர் கலிங்கத்தின் மீது எப்போது போர் தொடுத்தார்?

✅ விடை
தான் அரியணை ஏறிய எட்டாவது வருடத்தில் (கி.மு. 261).
137

கலிங்கப் போரின் பயங்கரத்தை விவரிக்கும் அசோகரின் கல்வெட்டு எது?

✅ விடை
13-வது பாறைக் கல்வெட்டு.
138

போருக்குப் பின் அசோகர் ஆயுதங்களைக் கைவிட்டு எந்தக் கொள்கையை ஏற்றுக்கொண்டார்?

✅ விடை
தர்மவிஜயம் (அறத்தின் வழி வெற்றி).
139

கலிங்கப் போருக்குப் பின் அசோகரை பௌத்த மதத்திற்கு மாற்றியவர் யார்?

✅ விடை
உபகுப்தர் (பௌத்த துறவி).
140

அசோகர் தனது தம்மக் (அறக்) கொள்கையைப் பரப்புவதற்காக நியமித்த அதிகாரிகளின் பெயர் என்ன?

✅ விடை
தர்ம மகாமாத்திரர்கள்.
141

பாடலிபுத்திரத்தில் மூன்றாவது பௌத்த மாநாட்டைக் கூட்டியவர் யார்?

✅ விடை
பேரரசர் அசோகர்.
142

தனது போதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க பாறைகளிலும் தூண்களிலும் கல்வெட்டுகளைப் பொறித்த முதல் அரசர் யார்?

✅ விடை
அசோகர்.
143

தகுதியற்ற ஒருவரின் மேல் கோபம் கொள்வதில் அல்லது வருத்தம் அடைவதில் எப்பயனுமில்லை என்று கூறியது எது?

✅ விடை
மரங்கொத்திப் பறவை
144

கன்பூசியனிசம் எங்கு காணப்படுகிறது?

✅ விடை
சீனா
145

கன்பூசியனிச கொள்கை யாரை அடிப்படையாகக் கொண்டது?

✅ விடை
கன்பூசியஸ் (குங் பு த்சே)
146

ஜொராஸ்டிரியனிசம் எங்கு காணப்படுகிறது?

✅ விடை
பாரசீகம்
147

ஜொராஸ்டிரியனிசம் யாரை அடிப்படையாகக் கொண்டது?

✅ விடை
ஜொராஸ்டர்
148

பெளத்தத்தில் சக்கரத்தில் உள்ள ஆரங்கள் எதனை குறிக்கிறது?

✅ விடை
எட்டு நெறிகள்
149

சிந்தன்னவாசல் எங்கு உள்ளது?

✅ விடை
புதுக்கோட்டை மாவட்டம்
150

பல்லூர் எங்கு உள்ளது?

✅ விடை
காஞ்சிபுரம் மாவட்டம்
151

பல்லூரில் யாருடைய சிலைகள் காணப்படுகிறது?

✅ விடை
புத்தர்

தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள்

🗺️
மற்ற அலகுகளைப் பார்க்க
Term 2 — அனைத்து அலகுகளும்
📚
புத்தக அடைப்புக்குத் திரும்ப
மற்ற Terms-ஐப் பார்க்க
📋
TNPSC குரூப் 4 PYQ பயிற்சி
முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
📰
தினசரி நடப்பு நிகழ்வுகள்
தினமும் புதுப்பிக்கப்படும் MCQ