வடஇந்தியாவில் வேதகால பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்கால பண்பாடும்
Term 2 · அலகு 1 · 148 வினா & விடை
Term 2
148 Q&A
Samacheer Kalvi
இந்த அலகு பற்றி
6ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி வரலாறு (Term 2) பாடப்புத்தகத்தின் "வடஇந்தியாவில் வேதகால பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்கால பண்பாடும்" அலகின் அடிப்படையில் கலையரசன் ரா தயாரித்த 148 வினா-விடைகள். TNPSC குரூப் 4 தேர்வுக்கு உதவும் வகையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் நகரமயமாதலின் முதல் கட்டம் எதனோடு முடிவுக்கு வந்தது?
✅ விடை
சிந்து சமவெளி நாகரிகத்தின் சரிவோடு
2
இந்தியாவில் யாருடைய வருகையால் வேதகாலம் எனும் கால கட்டம் தொடங்கியது?
✅ விடை
ஆரியர்கள் வருகையால்
3
வேதகாலம் என்பது எந்த காலக்கட்டத்திற்கு இடைப்பட்டது?
✅ விடை
கி.மு. 1500 - 600
4
வேதகாலம் என்ற பெயர் எதிலிருந்து பெறப்பட்டது?
✅ விடை
வேதங்கள் என்பதில் இருந்து பெறப்பட்டது
5
ஆரியர்கள் என்பவர்கள் யார்?
✅ விடை
ஆரியர்கள் இந்தோ-ஆரிய மொழி பேசும், இடம் விட்டு இடம் பெயர்ந்து செல்லக்கூடிய கால்நடை மேய்ப்பவர்கள் ஆவர்.
6
ஆரியர்கள் எங்கிருந்து வந்தவர்கள்?
✅ விடை
மத்திய ஆசியாவில் இந்து குஷ் மலையில் உள்ள கைபர் கணவாய் வழியாக இந்தியாவிற்கு வந்தவர்கள்.
7
ஆரியர்களின் முக்கியத் தொழில் என்ன?
✅ விடை
கால்நடை மேய்த்தல், மேலும் அழித்து எரித்து சாகுபடி செய்யும் வேளாண் முறையையும் பின்பற்றினர்.
8
அழித்து எரித்து சாகுபடி செய்யும் வேளாண்மை முறை என்றால் என்ன?
✅ விடை
இம்முறையில் நிலத்தின் மீது உள்ள மரங்கள் மற்றும் செடி கொடிகள் அனைத்தும் வெட்டப்பட்டு எரிக்கப்படும். அந்நிலத்தில் குறுகிய கால கட்டத்திற்கு வேளாண்மை செய்து அதன்பின் அந்நிலம் கைவிடப்படும். பின்னர் மக்கள் மற்றொரு இடத்தில் இதே போன்று வேளாண்மை செய்யத் தொடங்குவர்.
9
வேதகாலம் இந்தியாவில் எந்த பகுதிகளில் பரவி இருந்தது?
✅ விடை
வட இந்தியா
10
வேதகாலம் எந்த காலப்பகுதியைச் சார்ந்தது?
✅ விடை
இரும்புக் காலம்
11
வேதகால நாகரிகத்தின் இயல்பு என்ன?
✅ விடை
கிராம நாகரிகம்
12
ரிக் வேதகால ஆரியர்கள் எத்தகையவர்கள்?
✅ விடை
நாடோடிகள்
13
ஆரியர்களின் முக்கிய சொத்தாக கருதப்பட்டது எது?
✅ விடை
மேய்ச்சல் சமூகத்தினரான ஆரியர்களுக்கு கால்நடைகளே முக்கிய சொத்து ஆகும்.
14
ரிக் வேத காலத்தில் ஆரியர்கள் வாழ்விடம் எது?
✅ விடை
பஞ்சாப்
15
ரிக் வேத காலத்தில் பஞ்சாப் எவ்வாறு அழைக்கப்பட்டது?
✅ விடை
சப்த சிந்து (ஏழு ஆறுகள் ஓடும் நிலப்பகுதி)
16
ஆரியர்கள் சிந்து கங்கைச் சமவெளிப் பகுதியை நோக்கி எப்பொழுது குடியேறினர்?
✅ விடை
கி.மு. 1000
17
ரிக் வேத கால ஆரியர்கள் பயன்படுத்திய வேளாண்மைக் கருவிகள் யாவை?
✅ விடை
இரும்புக் கோடரி, இரும்பிலான கொழுமுனையைக் கொண்ட கலப்பை ஆகியவற்றை பரவலாகப் பயன்படுத்தினர்.
18
நான்கு வேதங்கள் யாவை?
✅ விடை
ரிக், யஜூர், சாம, அதர்வன
19
வேதகால இலக்கியங்களை எத்தனை பிரிவுகளாகப் பிரிக்கலாம்?
✅ விடை
இரு பிரிவுகள் (சுருதி, ஸ்மிருதி)
20
சுருதிகள் எனப்படுவது யாது?
✅ விடை
நான்கு வேதங்கள், பிராமணங்கள், ஆரண்யங்கள் மற்றும் உபநிடதங்களை உள்ளடக்கியது.
21
சுருதிகள் எத்தகையது என நம்பப்பட்டது?
✅ விடை
புனிதமானவை, நிலையானவை, கேள்விகள் கேட்கப்பட முடியாத உண்மை என கருதப்பட்டவை.
22
சுருதி என்பதன் பொருள் என்ன?
✅ விடை
கேட்டல் அல்லது எழுதப்படாதது. இவை வாய்மொழி வாயிலாக அடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்பட்டன.
23
ஸ்மிருதிகள் என்பது எவை?
✅ விடை
ஆகமங்கள், தாந்திரீகங்கள், புராணங்கள், இதிகாசங்கள் ஆகியவைகளைக் கொண்ட நூல்கள்.
24
ஸ்மிருதிகளுக்கு எடுத்துக்காட்டு?
✅ விடை
இதிகாசங்கள் – இராமாயணம், மகாபாரதம்; புராணங்கள் – சிவ புராணம், விஷ்ணு புராணம்; சூத்திரங்கள் – தர்ம சூத்திரம், மனு ஸ்மிருதி, நாரத ஸ்மிருதி.
25
ஸ்மிருதிகள் எத்தகையது என நம்பப்பட்டது?
✅ விடை
நிலையானவை அல்ல, தொடர்ந்து மாற்றங்களுக்கு உள்ளாகுபவை.
26
ஸ்மிருதி என்பதன் பொருள் என்ன?
✅ விடை
இறுதியான எழுதப்பட்ட பிரதி என்பதாகும்.
27
இந்தியாவின் தேசிய குறிக்கோள் எங்கிருந்து எடுக்கப்பட்டது?
✅ விடை
"சத்யமேவ ஜெயதே" (வாய்மையே வெல்லும்) என்ற வாக்கியம் முண்டக உபநிடதத்தில் இருந்து எடுக்கப்பட்டது.
28
வேதகால தொல்பொருள் சான்றுகள் எங்கு கிடைத்துள்ளன?
✅ விடை
சிந்து மற்றும் கங்கை நதிப் பகுதிகளிலும், பஞ்சாப், உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய தொல்லியல் ஆய்வு இடங்களிலும் கிடைத்துள்ளன (இரும்புக் கருவிகள், மண்பாண்டங்கள் ஆகியன).
29
வேத காலத்தை எத்தனை வகையாக வகைப்படுத்தலாம்?
✅ விடை
இரண்டு: தொடக்க வேதகாலம், பின் வேத காலம்.
30
தொடக்க வேதகாலம் எந்த காலக்கட்டத்தை சார்ந்தது?
✅ விடை
கி.மு. 1500-1000
31
பின் வேதகாலம் எந்த காலக்கட்டத்தை சார்ந்தது?
✅ விடை
கி.மு. 1000-600
32
ரிக் வேத கால அரசியல் எதனை அடிப்படையாகக் கொண்டது?
✅ விடை
இரத்த உறவுகளை
33
ரிக்டவதகால அரசியலின் அடிப்படை அலகு எது?
✅ விடை
குலம்
34
குலத்தின் தலைவர் யார்?
✅ விடை
குலபதி
35
ரிக் வேத கால சமுதாயம் எவ்வாறு இருந்தது?
✅ விடை
குடும்பம் – கிராமம் – விஸ் (குலம்) – ஜனா (இனக்குழு).
36
ரிக்டவேத காலத்தில் பல குடும்பங்கள் சேர்ந்தது எவ்வாறு அழைக்கப்பட்டது?
✅ விடை
கிராமம்
37
கிராமத்தின் தலைவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
✅ விடை
கிராமணி
38
பல கிராமங்களைக் கொண்ட தொகுப்பு எவ்வாறு அழைக்கப்பட்டது?
✅ விடை
விஸ் (குலம்)
39
விஸ் -ன் தலைவர் யார்?
✅ விடை
விஷயபதி
40
ஜனா (இனக்குழு) – வின் தலைவர் யார்?
✅ விடை
ராஜன்
41
ஜனாவின் தலைவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
✅ விடை
ஜனஸ்யகோபா (மக்களின் பாதுகாவலர்)
42
ரிக்டவேத காலத்தில் இருந்த இனக்குழு அரசர்களின் பெயர்கள்?
✅ விடை
பரதர், மத்சயர், புரு (ராஷ்டிரம்)
43
ராஜனின் முக்கிய பொறுப்பு என்ன?
✅ விடை
தனது இனக்குழுவை பாதுகாப்பது
44
ராஜனின் அதிகாரத்தை கட்டுப்படுத்தியது எந்த குழு?
✅ விடை
விதாதா, சபா, சமிதி, கணா ஆகிய அமைப்புகள்.
45
ராஜனின் அதிகாரத்தை கட்டுப்படுத்திய குழுக்களில் பழமையானது எது?
✅ விடை
விதாதா (இனக்குழுவின் பொதுக்குழு)
46
சபா என்பது என்ன?
✅ விடை
மூத்தவர்களைக் கொண்ட மன்றம் (முதியோர்கள்).
47
சமிதி என்பது என்ன?
✅ விடை
மக்கள் அனைவரையும் கொண்ட பொதுக்குழு
48
அரசர் தனக்கு உதவி செய்வதற்காக யாரை பணியில் அமர்த்திக் கொண்டார்?
✅ விடை
புரோகிதர் (தலைமை குரு)
49
அரசருக்கு அரசியல், பொருளாதாரம், ராணுவம் தொடர்பான விஷயங்களில் உதவி செய்தவர் யார்?
✅ விடை
சேனானி (படைத் தளபதி)
50
பிரதேச அரசுகள் எவ்வாறு உருவாகின?
✅ விடை
ஆரியர்கள் கிழக்கு நோக்கி நகர்ந்து கங்கை யமுனை நதிகளுக்கு இடைப்பட்ட பகுதிகளில் குடியேறிய போது ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக பிரதேச அரசுகள் உருவாகின.
51
அரசர் தனது நிலைமையை வலுப்படுத்திக் கொள்ள என்ன செய்தார்?
✅ விடை
பல சடங்குகளையும் யாகங்களையும் செய்தார்
52
ஜனபதங்கள் அல்லது ராஷ்டிரங்கள் எவ்வாறு உருவாகின?
✅ விடை
பின் வேத காலத்தில் பல ஜனங்கள் அல்லது இனக்குழுக்கள் இணைக்கப்பட்டபோது ஜனபதங்கள் அல்லது ராஷ்டிரங்கள் உருவாகின.
53
பின் வேத காலத்தில் தன் முக்கியத்துவத்தை இழந்தவைகள்?
✅ விடை
சபா, சமிதி ஆகிய அவைகள்.
54
பின் வேத காலத்தில் எந்த மன்றம் இல்லாமல் போனது?
✅ விடை
விதாதா
55
வேத காலத்தில் பாலி என்பது என்ன?
✅ விடை
பாலி என்பது மக்கள் தாங்களாகவே மனமுவந்து அரசனுக்கு கொடுத்து வந்த காணிக்கையாகும். பின் வேத காலத்தில் இது ஒரு வரி ஆக மாற்றம் பெற்று மக்களிடமிருந்து தொடர்ந்து முறையாக வசூல் செய்யப்பட்டது.
56
குரு மற்றும் பாஞ்சால அரசுகள் செழித்தோங்கிய காலம் எது?
✅ விடை
பின் வேத காலம்
57
அயோத்தி இந்திரப்பிரஸ்தம் மதுரா போன்ற நகரங்கள் எக்காலத்தில் உருவாகின?
✅ விடை
பின் வேத காலம்
58
பாலி என்பது என்ன?
✅ விடை
இது ஒரு வரியாகும். ஒருவர் தனது விவசாய மகசூலில் அல்லது கால்நடைகளில் 1/6 பங்கை வரியாக செலுத்த வேண்டும்.
59
வேத கால சமூகம் எத்தகைய சமூகம் ஆகும்?
✅ விடை
தந்தை வழி சமூகம்.
60
ஆரியர் அல்லாத மக்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
✅ விடை
தஸ்யுக்கள், தாசர்கள் (இவர்கள் கருப்புநிற ஆரியர் அல்லாத மக்கள்)
61
ரிக் வேத காலத்தில் வர்ண முறை எப்போது தோன்றியது?
✅ விடை
ரிக் வேத காலத்தின் பிற்பகுதியில்
62
தொடக்க வேத காலத்தில் வர்ணங்கள் எவ்வாறு பிரிக்கப்பட்டன?
✅ விடை
தோல் நிறத்தின் அடிப்படையிலும் தொழிலின் அடிப்படையிலும்